search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் தண்டவாளம்"

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணியை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று ஜெயவர்தன் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார். #MetroTrain

    சென்னை:

    டெல்லியில் உள்ள நிர்மாண் பவனில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி அர்மிப்சிங்புரியை தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க மத்திய அரசு கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை பொறுத்த வரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை, சோழிங்கநல்லூர், பெருங்குடி குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகள் சேராமல் தவிர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஆனாலும் மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கி இத்திட்டத்தை செயல்படுத்த வெண்டும். சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    தென் சென்னை தொகுதியிலுள்ள 7 ஊராட்சிகள் உள்ளடங்கிய துணை கோள் நகரம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தும் போது உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் பொதுமக்களின் வாழ் வாதாரத்தை உயர்த்த அம்ருத் திட்டத்தின் கீழ் போதிய நிதியை ஒதுக்கவேண்டும்.

    நாடு முழுவதும் ஏற்கனவே கட்டியிருக்க கூடிய குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடிசை மாற்று வாரிய வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு உடனே வகுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெயவர்தன் எம்பி. அந்த கோரிக்கை மனுவில் கூறி உள்ளார். #MetroTrain

    தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து இருக்கிறது. இது விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. #MetroTrain

    சென்னை:

    சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமானநிலையம் வரையும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கு 4 வழிகளில் பயணிகள் சென்று வரலாம்.

    இதில் சின்னமலையில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையம் வரை ரெயில் போக்குவரத்து தொடங்கிய போது, இந்த ரெயில் நிலையத்தின் கிழக்கு பக்கத்தில் 2 வாயில்கள் திறக்கப்பட்டன. இவை மட்டும் பயணிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

    இந்தநிலையில் டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாசாலையை கடந்து மேற்கு பக்கம் செல்லவும், இந்த நிலையத்தின் வடக்கு, தெற்கு வாயில் பகுதியில் இருந்து செல்லவும் அண்ணா சாலையின் கீழ் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் ஒரு பாதை முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தற்போது அண்ணா சாலையின் மேற்கு பக்கத்தில் உள்ள டி.எம்.எஸ். பஸ் நிறுத்தம் வரை அமைக்கப்பட்ட 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து இருக்கிறது. இது விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #MetroTrain

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் பல்வேறு மால்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு வேன் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்குகிறது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக வார இறுதி நாட்களில் பல்வேறு மால்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு வேன் வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடங்குகிறது.

    தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு வேன்கள் இயக்கப்பட உள்ளது. அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், வேளச்சேரி பீனிக்ஸ்மால் ஆகிய பகுதிகளுக்கு வேன் (டெம்போ டிராவலர்) வசதி செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களில் பயணிகள் பொழுதுபோக்குவதற்கு இது வசதியாக அமையும்.

    ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து போரூர் சரவணா ஸ்டோர் செல்வதற்கு சிறப்பு வேன் வசதி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தொடங்கப்படுகிறது. ரூ. 15 முதல் ரூ. 20 வரை கட்டணம் செலுத்தி இந்த வேன்களில் பயணம் செய்யலாம்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. மெட்ரோ ரெயில் பயணிகள் ஷாப்பிங் மால்களுக்கு எளிதில் செல்ல மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து டெம்போ டிராவலர் வேன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. ரூ. 15 முதல் 20 வரை கட்டணம் செலுத்து இதில் பயணம் செய்யலாம்.

    தேனாம்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
    அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், வேளச்சேரி பீனிக்ஸ் மால், போரூர் சரவணா ஸ்டோர் பகுதிகளுக்கு சிறப்பு வேன் வசதி செய்யப்படுகிறது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இந்த வேன் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain

    வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது. #MetroTrain #ChennaiMetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    முதல்கட்ட விரிவாக்கமாக விம்கோநகர் 9 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    7 ரெயில் நிலையங்களுடன் இந்த வழித்தட பாதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைந்து 2020-ல் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது.

    வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டையில் 2 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 5 உயர்மட்ட பாதை ரெயில் நிலையங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதில் தண்டவாளப் பணிகள், மின்சார பணிகள், கேபிள்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த வழித்தட பாதை பணிகள் நிறைவு பெற்றதும் பயணிகள் விம்கோ நகர்- விமான நிலையத்துக்கு அண்ணாசாலை வழியாக 60 நிமிடங்களில் பயணம் செய்யமுடியும். அதேபோல் பயணிகள் சென்ட்ரல் வந்து கோயம்பேடுக்கும் செல்ல முடியும். #MetroTrain #ChennaiMetroTrain

    ×